2 தினங்களுக்கு மின் தடையில்லை

இன்றும்(29.01), நாளையும்(30.01) மின்தடை செய்யப்படாது என இலங்கை மின்சார சபை தலைவர் அறிவித்துள்ளார்.

மழை காரணமாக நீர் மின் உற்பத்திக்கு தேவையான நீரினை, நீர் மின் உற்பத்தி நிலையங்களுக்கு வழங்க கூடிய நிலை ஏற்பட்டுள்ளமையினால் மின் உற்பத்திக்கான நீரினை தடையின்றி வழங்க நீர் முகாமைத்துவ செயலகம் பணித்துள்ளது.

இதன் காரணமாக இரு தினங்களுக்கு மின் தடை செய்யப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

பெப்ரவரி முதலாம் திகதி முதல் உயர்தர பரீட்சைகள் முடிவடையும் வரை மின் தடை செய்ய வேண்டாமென பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு கோரிக்கை முன் வைத்துள்ளது.

2 தினங்களுக்கு மின் தடையில்லை

Social Share

Leave a Reply