“களுத்துறை சுத்தா” கைது!

ஒன்பது குற்றச்செயல்களுடன் தொடர்புடைய “களுத்துறை சுத்தா” என்ற நபரும் அவருக்கு உறுதுணையாக இருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாயும் மகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபரால் திருடப்பட்ட தங்க நகைகளை அடகு வைத்து, கைது செய்யப்பட்ட தாயும் மகளும் இந்த மோசடிக்கு உதவியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேல்மாகாண புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பாணந்துறையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போதே குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பின்னர், சந்தேகநபரின் கால்சட்டைப் பையில் இருந்த பற்றுச்சீட்டுகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, ​​குறித்த சந்தேகநபர்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட நீண்ட விசாரணைகளின் போது, ​​சிறைச்சாலையில் இருந்தபோது அடையாளம் காணப்பட்ட ஒருவரின் தாயும் சகோதரியும் இந்த தங்கப் பொருட்களை அடகு வைக்க உதவியதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதன்படி சந்தேகநபர்கள் இருவரையும் கைது செய்து அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் பாணந்துறை மற்றும் மொரட்டுவ பிரதேசங்களில் விற்பனை செய்யப்பட்ட தங்க நகைகள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது சுமார் 30 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள், வளையல்கள், பதக்கங்கள் போன்றவை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

சந்தேகநபர் கடந்த சில மாதங்களில் அலுபோமுல்ல மற்றும் பின்வத்த பிரதேசத்தில் இடம்பெற்ற கொள்ளை சம்பவம் மற்றும் நகை பறிப்பு சம்பவங்களுடன் நேரடியாக ஈடுபட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

"களுத்துறை சுத்தா" கைது!

Social Share

Leave a Reply