நாட்டில் நிலவும் கொவிட் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவரும் பொருட்டு அமுல்படுத்தப்பட்டிருந்த நாடு முடக்கம் கடந்த முதலாம் திகதி கொவிட் கட்டுப்பாடுகளுக்கமைய வழமைக்குக் கொண்டுவரப்பட்டது.
அதற்கமைய தற்போது, அனைத்து மாகாண ஆளுனர்களின் தீர்மானத்தின்படி 200 மாணவர்களுக்குட்பட்ட மாணவர்களைக் கொண்ட ஆரம்ப பிரிவு பாடசாலைகள் அனைத்தும் எதிர்வரும் 21ம் திகதி ஆரம்பிக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.