பாகிஸ்தானின் முன்னாள் உள்துறை அமைச்சர் கைது!

பாகிஸ்தானின் முன்னாள் உள்துறை அமைச்சர் அந்நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று காலை அவர் கைது செய்யப்பட்டதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் நெருங்கிய நண்பரான ஷேக் ரஷித் அகமது எனப்படுபவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

நெடுஞ்சாலையில் வைத்து அவர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். எனினும் அவரது வீட்டுக்குள் நுழைந்த காவல்துறை அதிகாரிகள் சிலர், அவரது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்து, வேலையாட்களை தாக்கி, கைது செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் இம்ரான் கானுக்கு ஆதரவு அளித்ததே தான் கைது செய்யப்பட்டதற்கு காரணம் என கைதான முன்னாள் உள்துறை அமைச்சர் அவர் கூறியுள்ளார்.

பாகிஸ்தானின் முன்னாள் உள்துறை அமைச்சர் கைது!
https://www.facebook.com/101424405897210/photos/a.195486213157695/195485669824416/

Social Share

Leave a Reply