மர்மமான முறையில் காணாமல் போயிருந்த கோடீஸ்வர வர்த்தகர் ஒருவரின் சடலம் தலங்கம பெலவத்தையில் உள்ள அவரது சொகுசு மூன்று மாடி குடியிருப்பின் நீச்சல் தடாகத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தலங்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெல்லம்பிட்டிய கிட்டம்பஹு பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய ரொஷான் வன்னிநாயக்க என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கடந்த 30ம் திகதி வீட்டிலிருந்து சென்ற சகோதரர் இதுவரை வீடு திரும்பவில்லை என உயிரிழந்தவரின் சகோதரி நேற்று (01.02) வெல்லம்பிட்டி பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார். இவ்வாறு காணாமல் போயிருந்தவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
தலங்கம பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ரொஷான் அனுருத்தவின் பணிப்புரையின் கீழ் இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
