ஹலவத்த தெதுறு ஓயாவில் நீராட சென்ற இரண்டு குழந்தைகள் உட்பட மூவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
நீர்கொழும்பிலிருந்து ஹலவத்தையிலுள்ள உறவினர் ஒருவரின் வீட்டுக்கு குளிப்பதற்குச் சென்ற ஒன்பது பேரில் மூவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர்களின் நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த 35 , 7 மற்றும் 6 வயதுடைய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, மகள் மற்றும் உறவினர் ஒருவரும் அடங்குவதாக தெரியவந்துள்ளது.
நீரில் மூழ்கிய மேலும் மூவர் மீட்கப்பட்டு ஹலவத்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.