மலையகம் பற்றிய உலக அவதானத்தை முன்னெடுக்கும் நோக்கில், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்பி தலைமையிலான தமிழ் முற்போக்குகூட்டணி குழுவினரை, நுவரெலியாவுக்கு பயணம் செய்துள்ள அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தலைமையிலான குழுவினர் இன்று(07.02) சந்தித்துள்ளனர்.
தமிழ் முற்போக்கு கூட்டணி குழுவில், பாராளுமன்ற உறுப்பினர்களான வேலுசாமி இராதாகிருஷ்ணன், எம். உதயகுமார் ஆகியோருடன் எம். பரணீதரன், ஆர், ராஜாராம், விஸ்வநாதன் ஆகியோரும், அமெரிக்க தூதுவர் குழுவில், அரசியல் துறை பொறுப்பாளர் ரூபி, யூஎஸ்எயிட் துணை பணிப்பாளர் டிம் ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.
