துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11,200ஐ கடந்துள்ளதுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
துருக்கியில் 8,574 பேர் பலியாகியுள்ளதுடன், சிரியாவில் 2,662 இறப்புகள் பதிவாகியுள்ளது. மொத்தமாக 11,236 இறப்புகள் இதுவரையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
எவ்வாறாயினும், சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறித்த துல்லியமான புள்ளி விபரங்களைப் பெறுவது கடினமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடிந்து விழுந்த கட்டிடங்களின் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.