சர்வதேச சிரிக்கட் பேரவையின் மகளிர் உலக கிண்ண தொடரை இலங்கை அணி வெற்றியோடு ஆரம்பித்து வைத்துள்ளது. தென்னாபிரிக்காவில் நேற்று(10.02) இரவு ஆரம்பித்த முதற் போட்டியில் தென்னாபிரிக்கா அணியினை 03 ஓட்டங்களினால் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.
சாமரி அத்தப்பத்து, விஷ்மி குணரட்ன ஆகியோரது அபாரமான துடுப்பாட்டம் இலங்கை அணிக்கு வெற்றியினை வழங்கியுள்ளது. சாமரி அதிரடியாக துடுப்பாடி 50 பந்துகளில் 68 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார். விஷ்மி 35 ஓட்டங்களை பெற்றார். இருவரும் 86 ஓட்டங்களை இரண்டாவது விக்கெட் இணைப்பாட்டமாக பகிர்ந்து கொண்டனர்.
இங்கை அணி 20 ஓவர்களில் 04 விக்கெட்களை இழந்து 129 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. பதிலுக்கு துடுப்பாடிய தென்னாபிரிக்கா அணி இறுதி பந்துவரை போராடிய போதும் வெற்றி பெற முடியாமல் போனது.
தென்னாபிரிக்கா அணியின் விக்கெட்களை தொடர்ச்சியான இடைவேளைகளில் கைப்பற்றியது இலங்கையின் வெற்றிக்கு பந்துவீச்சின் பங்காக அமைந்தது.
தென்னாபிரிக்கா அணியின் துடுப்பாட்டத்தில் சனி லூஸ் 28 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். இலங்கை அணியின் பந்துவீச்சில் இனோக்கா ரனவீர 03 விக்கெட்களையும், சுகந்திகா குமாரி, ஒஷாதி ரணசிங்க ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்,.
தென்னாபிரிக்கா அணி 20 ஓவர்கள் நிறைவில் 09 விக்கெட்களை இழந்து 126 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
போட்டியின் நாயகியாக சாமரி தெரிவு செய்யப்பட்டார்.
