அத்தியாவசிய சத்திரசிகிச்சைகளுக்கு மட்டுமே அனுமதி!

அத்தியாவசியமற்ற சத்திரசிகிச்சைகளை குறுகிய காலத்திற்கு ஒத்திவைக்குமாறு சுகாதார அமைச்சு அரசாங்க வைத்தியசாலைகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

மருத்துவரின் பரிந்துரையின் அடிப்படையில் ஒத்திவைக்கப்படும் சத்திரசிகிச்சைகள் குறுகிய காலத்திற்கு தாமதமாகும் எனவும், அரச வைத்தியசாலைகளில் அத்தியாவசிய சத்திரசிகிச்சைகளை தாமதமின்றி மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சகல சத்திரசிகிச்சைகளையும் குறுகிய காலத்திற்கு ஒத்திவைக்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளதாக வெளியான செய்திகளில் உண்மையில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அத்தியாவசிய சத்திரசிகிச்சைகளுக்கு மட்டுமே அனுமதி!
https://www.facebook.com/101424405897210/photos/a.195486213157695/195485669824416/

Social Share

Leave a Reply