
சன்ரைசர்ஸ் ஈஸ்ட்டர்ன் கேப் மற்றும் பிரட்டோரியா கப்பிட்டல்ஸ் அணிகளுக்கிடையில் நேற்று (12.02.2023)
தென்னாபிரிக்கா 20-20 (SA20) தொடரின் இறுதிப்போட்டி ஜொஹெனஸ்பேர்க்கில் நடைபெற்றது. இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஈஸ்ட்டர்ன் கேப் அணி 4 விக்கெட்களினால் வெற்றி பெற்றது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சன்ரைசர்ஸ் ஈஸ்ட்டர்ன் கேப் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.
முதலில் துடுப்பாடிய பிரட்டோரியா கப்பிட்டல்ஸ் அணி 19.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 135 ஓட்டங்களை பெற்றது. இதில் குசல் மென்டிஸ் 21(19) ஓட்டங்களை பெற்றார். பந்துவீச்சில்
ரோலோப் வன் டெர் மெர்வ் 4 விக்கெட்களையும், ஒட்னியல் பார்ட்மன், சிசண்டா மகாலா ஆகியோர் தலா 2 விக்கெட்களையும், ஏய்டன் மார்க்ரம், மார்க்கோ ஜென்சென் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.
பதிலுக்கு துடுப்பாடிய சன்ரைசர்ஸ் ஈஸ்ட்டர்ன் கேப் அணி 16.2 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 137 ஓட்டங்களை பெற்றது. இதில் அடம் ரொஸ்ஸிங்டொன் 57(30) ஓட்டங்களை பெற்றார். பந்துவீச்சில் அன்றிச் நோக்கியா 2 விக்கெட்களையும், ஈதான் போஸ்ச், ஆடில் ரஷீத், கொலின் இங்ராம், ஜேம்ஸ் நீஷாம் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களை கைப்பற்றினார்கள்.
இந்த போட்டியின் நாயகனாக ரோலோப் வன் டெர் மெர்வ் தெரிவு செய்யப்பட்டார்.
தொடரின் நாயகனாக ஏய்டன் மார்க்ரம் தெரிவு செய்யப்பட்டார்.
டெஸெர்ட் வைப்பர்ஸ் மற்றும் கல்ப் ஜயண்ட்ஸ் அணிகளுக்கிடையில் நேற்று (12.02.2023) சர்வதேச 20-20 (ILT20)
இறுதிப்போட்டியில் கல்ப் ஜயண்ட்ஸ் அணி 7 விக்கெட்களினால் வெற்றி பெற்றது. இந்த போட்டி மழையின் காரணமாக அடுத்த நாளுக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கல்ப் ஜையண்ட்ஸ் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.
முதலில் துடுப்பாடிய டெஸெர்ட் வைப்பர்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 146 ஓட்டங்களை பெற்றது. இதில் வனிது ஹசரங்க 55(27) ஓட்டங்களையும், சாம் பில்லிங்ஸ் 31(29) ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் கார்லொஸ் ப்ராத்வைட் 3 விக்கெட்களையும், குவைஸ் அஹமட் 2 விக்கெட்களையும், கிறிஸ் ஜோர்டான், கொலின் டி க்ரான்ட்ஹொம் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களை கைப்பற்றினார்கள்.
பதிலுக்கு துடுப்பாடிய கல்ப் ஜையண்ட்ஸ் அணி 18.4 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 149 ஓட்டங்களை பெற்றது. இதில் கிறிஸ் லின் 72(50) ஓட்டங்களையும், கெர்ஹார்ட் எரஸ்மர்ஸ் 30(33) ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் லுக்கே வூட், டொம் கரண், வனிது ஹசரங்க ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களை கைப்பற்றினார்கள்.
இந்த போட்டியின் நாயகனாக கார்லொஸ் ப்ராத்வைட் தெரிவு செய்யப்பட்டார்.
-வி.பிரவிக்-


