அநுராதபுரத்திலிருந்து வவுனியா வரையான வடக்கு புகையிரதப் பாதையின் அபிவிருத்திப் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
இவ்வருடம் முன்னெடுக்கப்படும் மிகப்பெரிய அபிவிருத்தித் திட்டமாக அண்மைய நாட்களில் இந்த அபிவிருத்தி திட்டம் ஆரம்பிக்கப்பட்டதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் பந்துல குணவர்தனவின் வழிகாட்டலில், இந்திய கடன் திட்டத்தின் கீழ் இந்த அபிவிருத்தி திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அடுத்த சில மாதங்களில் இதனை முழுமையாக நிறைவு செய்ய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு திட்டமிட்டுள்ளது.
