சர்வதேசக் கிரிக்கெட் பேரவையின் மகளிர் T20 உலகக்கிண்ண தொடரின் இலங்கை, அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான போட்டியில் அவுஸ்திரேலியா அணி இலகுவாக வெற்றி பெற்று அரை இறுதி வாய்ப்பை ஓரளவு உறுதி செய்து விட்டது. இலங்கை அணியின் இந்த தோல்வி அடுத்த போட்டியில் பெரிய வெற்றி ஒன்றினை நியூசிலாந்து அணிக்கெதிராக பெற வேண்டும் என்ற நிலையினை உருவாக்கியுள்ளது.
அடுத்த போட்டியில் அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்கா அணியிடம் மோசமாக தோல்வியடைந்து, தென்னாபிரிக்கா அணி பங்களாதேஷ் அணியினை வெல்ல வேண்டும். இலங்கை அணி தகுதி பெற தென்னாபிரிக்கா அணி மீதமுள்ள போட்டிகளில் தோல்வியடைய வேண்டும்.
இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.
முதலில் துடுப்பாடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 08 விக்கெட்களை இழந்து 112 ஓட்டங்களை பெற்று கொண்டது. இதில் ஹர்சிதா சமரவிக்ரம 34(40) ஓட்டங்ககளையும், விஷ்மி குணரட்ன 24(33) ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தனர்.
அவுஸ்திரேலியா அணி சார்பாக மெஹான்ஸ் கட்ச் 04 விக்கெட்களையும், கிரேஸ் ஹரிஸ் 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
பதிலுக்கு துடுப்பாடிய அவுஸ்திரேலியா அணி 15.5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 113 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர். பெத் மூனி56(53) ஓட்டங்களையும், அலிஷா ஹீலி54(42) ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.
