மினுவாங்கொட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி!

மினுவாங்கொட பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பீலாவத்தை ஆடியம்பலம் பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நேற்றிரவு (16.02) மினுவாங்கொடை, பொரகொடவத்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த நபரை, மறைந்திருந்த நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளார் என தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் தொடர்பில் இதுவரை எவ்வித தகவலும் வெளியாகவில்லை என்பதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மினுவாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மினுவாங்கொட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி!
https://www.facebook.com/101424405897210/photos/a.195486213157695/195485669824416/

Social Share

Leave a Reply