விற்பனைக்கு தயார் செய்யப்பட்ட நிலையில் வைத்திருந்த 42 போலி தங்கத் துண்டுகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் நேற்று (17.02) பிற்பகல் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடமிருந்து, 11 கிலோ 100 கிராம் எடையுள்ள தங்கத் துண்டுகள் கண்டெடுக்கப்பட்டதுடன், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட இலத்திரனியல் தராசு உள்ளிட்ட சில உபகரணங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் கனகபுரம் மற்றும் கிளிநொச்சி பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
