டிரக் வண்டி ஒன்றில் 18 சடலங்கள் – புலம்பெயர்ந்தோர் என சந்தேகம்!

18 சடலங்களுடன் டிரக் வண்டி பல்கேரிய பொலிசாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பல்கேரியாவின் தலைநகரான சோபியாவிலிருந்து வடகிழக்கில் 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள லோகோர்ஸ்கோ என்ற கிராமத்திலேயே இந்த டிரக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அந்த வண்டியில் பச்சிளம் குழந்தை ஒன்றின் சடலம் உட்பட 18 சடலங்களும், ஐந்து குழந்தைகள் உட்பட 34 பேரும் இருந்துள்ளனர். அங்கிருந்து மீட்கப்பட்ட அனைவரும் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

டிரக் வண்டியில் இருந்தவர்கள் புலம்பெயர்ந்தவர்கள் என்று சந்தேகிப்பதாகவும், மேலும், அவர்கள் ஆப்கானிஸ்தான் பிரஜைகளாக இருக்கலாம் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் அனைவரும் பல நாட்களாக பசியால் வாடி, கடும் குளிர் காரணமாக அவதிப்பட்டதுள்ளதாகவும், ஆக்ஸிஜன் பற்றாக்குறையினால் நோய்வாய்ப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

டிரக் வண்டி ஒன்றில் 18 சடலங்கள் - புலம்பெயர்ந்தோர் என சந்தேகம்!
https://www.facebook.com/101424405897210/photos/a.195486213157695/195485669824416/

Social Share

Leave a Reply