ரக்பி உலகக்கிண்ண கண்காட்சி நிகழ்வு மூன்றாம் நாள்

ரக்பி உலகக்கிண்ணத்தின் காட்சி நிகழ்ச்சியின் மூன்றாம் நாள் நிகழ்வுகள், ரக்பி உலகக்கிண்ண தொடரின் அனுசரணையாளர்களான மாஸ்டர் கார்ட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் நேற்று(20.02) சினமன் லேக்சைட்டில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் தென்னாபிரிக்கா அணியின் முன்னாள் வீரர் பிரைன் ஹபானா கலந்து கொண்டார். அவருடைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.

விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ரொஷான் ரணசிங்க, அமைச்சின் செயலாளர் மகேசன் உட்பட மாஸ்டர் கார்ட் நிறுவனத்தின் முக்கியஸ்தர்கள் அடங்கலாக மேலும் பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இலங்கையில் விளையாட்டு நிதி துறையினை மேம்படுத்த வேண்டும் என அமைச்சர் ரொஷான் ரணசிங்க தனது உரையில் கூறினார். 140 வருடங்கள் ரக்பி பாரம்பரியம் கொண்ட இலங்கை தரப்படுத்தல்களில் 46 ஆவது இடத்தில் காணப்படுகிறது. எங்கள் வீரர்கள் சிறப்பாக விளையாடி வருகிறார்கள். அதற்கு பாராட்ட வேண்டும் எனவும் அமைச்சர் மேலும் கூறினார்.

மாஸ்டர் கார்ட் நிறுவனத்தின் தெற்காசிய பிராந்திய தலைமையதிகாரி விகாஷ் ஷர்மா, இலங்கைக்கான முகாமையாளர் சதுன் ஹப்புக்கொட ஆகியோர் கலந்து கொண்டனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ரக்பி பிரீமியர் லீக் தொடரில் சம்பியனாகிய கண்டி விளையாட்டு கழகத்தின் வீரர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்ட அதேவேளை, அவர்களுக்கும் கிண்ணம் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.

ரக்பி உலகக்கிண்ண கண்காட்சி நிகழ்வு மூன்றாம் நாள்
ரக்பி உலகக்கிண்ண கண்காட்சி நிகழ்வு மூன்றாம் நாள்
https://www.facebook.com/101424405897210/photos/a.195486213157695/195485669824416/

Social Share

Leave a Reply