இன்று (22.02) காலை 11.45 மணியளவில் புத்தல பிரதேசத்திற்கு அருகில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புத்தள மற்றும் வெல்லவாய பகுதிகளுக்கு இடையில் 3.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக புவியியல் மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது.
இதனால் எந்தவொரு சேதமும் பதிவாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
