இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு கடந்த நாட்களில் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்த, ரக்பி உலக கிண்ண போட்டியின் வெற்றி பெறும் அணிக்கு வழங்கப்படும் வெற்றிக்கிண்ணம் மீண்டும் மக்கள் பார்வைக்காக இன்றைய தினம் (23.02) காலை 9.00 மணி முதல் 3.00 மணி வரையில், கொழும்பு 2 இல் அமைந்திருக்கும் சினமன் லேக்சைட் ஹோட்டலில் காட்சிப்படுத்தப்படவுள்ளது.
மேலும் கடந்த ஐந்து நாட்களாக இலங்கையில் இடம்பெற்ற பல்வேறு நிகழ்வுகளிலும் இந்த கிண்ணம் காட்சிப்படுத்தப்பட்டிருந்ததுடன், மக்கள் இந்த கிண்ணத்தை இன்றும் சென்று பார்வையிடலாம் என்று ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளார்கள்.
இதுவரையில் ரக்பி உலக கிண்ணத்தை பார்வையிடாத, ரக்பி பிரியர்களுக்கு இது ஓர் அரிய வாய்ப்பாக அமையும் என்பதையும் அறியத்தருகின்றோம்.
