தேர்தல்கள் ஆணைக்குழுவின் விசேட கலந்துரையாடல் இன்று!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை மார்ச் 09ம் திகதி நடத்துவது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு இன்று (24.02) கூடி கலந்துரையாடி தீர்மானம் எடுக்கவுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் ஜி.புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பில் ஆணைக்குழு உறுப்பினர்கள் ஏகமனதாக தீர்மானம் எடுத்துள்ளதாகவும், அதில் மாற்றுக் கருத்துக்கள் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தல் நடத்துவது தொடர்பான அனைத்து வர்த்தமானி அறிவித்தல்களிலும் ஆணைக்குழுவில் இருந்த 5 உறுப்பினர்களும் கையொப்பமிட்டுள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேர்தல் ஆணைக்குழு தேர்தல் திகதி தொடர்பில் முடிவெடுக்கப்பட்ட வேளையில் அனைவரும் சமூகமளிக்கவில்லை எனவும், கோரம் இல்லாமல் எடுக்கப்பட்ட சட்ட பூர்வமற்ற தேர்தல் எனவும், ஆகவே தேர்தல் ஒன்று அறிவிக்கப்படவில்லை எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று(23.02) பாராளுமன்றத்தில் அறிவித்திருந்தார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் விசேட கலந்துரையாடல் இன்று!
https://www.facebook.com/101424405897210/photos/a.195486213157695/195485669824416/

Social Share

Leave a Reply