பொதுஜன பெரமுனவின் பொதுக்கூட்டம் ரத்து!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இந்த ஆண்டு நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு அனுராதபுரத்தில் இன்று(24.02) நடத்தவிருந்த பொதுக்கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

நீதிமன்ற செயற்பாடுகளுக்கு அமைய இந்த பொதுக்கூட்டத்தை நடத்துவதில்லை என தீர்மானித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன,
“உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான முதலாவது கூட்டத்தை 24ம் திகதி அனுராதபுரத்தில் நடாத்த தீர்மானித்திருந்தும், எனினும் தேர்தல் தொடர்பான நீதிமன்ற தீர்ப்பை பார்த்துவிட்டு அதன் பின்னர் கூட்டத்தை நடத்த கட்சித் தலைவர்களுடன் ஆலோசித்து கூட்டத்தை நடத்த தீர்மானித்துள்ளோம். ஏனைய கட்சிகளின் பொது கூட்டங்களுக்கு இல்லாத அளவு மாபெரும் கூட்டம் எப்போதும் எமது கட்சிக்கு இருக்கும் என்பதை நாங்கள் நிரூபிப்போம் என தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுனவின் பொதுக்கூட்டம் ரத்து!
https://www.facebook.com/101424405897210/photos/a.195486213157695/195485669824416/

Social Share

Leave a Reply