இன்று (02.03) முதல் மார்ச் 7ம் திகதி வரை கடுமையான நிலநடுக்கங்கள் ஏற்படும் என்று நெதர்லாந்து புவியியலாளர் ஃபிராங்க் ஹூனர்பெர்க் தெரிவித்துள்ளார்.
பூமியின் மேலோட்டத்தின் ஏற்படுகின்ற வலுவான நகர்வுகளே இதற்குக் காரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஈராக் புவியியலாளர் சலின் அமாதியும் இதனை உறுதி செய்துள்ளார் என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஜப்பான், புவேர்ட்டோ ரிக்கோ, அலாஸ்கா, பிஜி, கிரீஸ், சீனா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் நேற்று (01.03) ரிக்டர் அளவுகோலில் 2.5 முதல் 5.4 வரையிலான 49 நிலநடுக்கங்கள் உணரப்பட்டுள்ளதாக, அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.