இம்மாதம் 01 ஆம் திகதி நாடு திறக்கப்பட்டதன் பின்னர் மக்களின் நடவடிக்கைகள் மிக மோசமாக காணப்படுவதாகவும், ஏற்றுக்கொள்ளும் விதத்திலும் இல்லையென பொது சுகாதர பரிசோதகர் சங்கம் தெரிவித்துள்ளது.
மக்கள் வெளியிடங்களுக்கு செல்லும் போதும் எந்தவித சுகாதர நடைமுறைகளை பின்பற்றுவதாக இல்லை. பல அலுவலங்களிலும் இந்த நிலை காணப்படுகிறது. எந்தவித சுகாதர ஏற்பாடுகளும் இல்லை. அவை பின்பற்றப்படுவதாகவும் இல்லை.
இதே நிலையில் சென்றால் கடந்த வருடம் மார்ச் மாதம் உருவாகிய நிலை மீண்டும் உருவகம். ஆனால் அவ்வாறு செல்வது நாட்டுக்கு நல்லதல்ல என பொது சுகாதர பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உப்புல் ரோஹன தெரிவித்துள்ளார்.
வெளியே செல்லும் போதும், கூட்டம் கூடும் போதும் மக்கள் கொவிட் தொற்று கொத்தணி உருவாகாமல் பாதுகாப்பாக செயற்படவேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.