காணாமல் போன ரோஹிதவின் கடனட்டை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் ரோஹித ராஜபக்ஷவின் கடன் அட்டை காணாமல் போனமை தொடர்பில் நாரஹேன்பிட்டி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மேற்படி கடனட்டையிலிருந்து சுமார் 400 அமெரிக்க டொலர்கள் மோசடியான முறையில் கொடுக்கல் வாங்கல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் 03ம் திகதி கோட்டேயிலுள்ள அவரது வீட்டிலிருந்து மாத்தறை நோக்கி பயணித்த வேளையில் தனது கடன் அட்டை காணாமல் போனதாக ரோஹித ராஜபக்ஷ பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளதாக நாரஹேன்பிட்டி பொலிஸார் மேலதிக நீதவானிடம் அறிவித்துள்ளனர்.

விசாரணை நோக்கங்களுக்காக வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்ட பரிவர்த்தனை அறிக்கையை வழங்குமாறு குறித்த கடனட்டைக்கு சொந்தமான தலைமை அலுவலக முகாமையாளருக்கு உத்தரவு பிறப்பிக்குமாறு பொலிஸார் நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காணாமல் போன ரோஹிதவின் கடனட்டை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்!

Social Share

Leave a Reply