கிழக்கு பல்கலைக்கழகத்தில் பயிலும் வவுனியாவை சேர்ந்த மாணவர் ஒருவர் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
26 வயதுடைய குறித்த மாணவன் தற்கொலை செய்துகொண்டமைக்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை.
உயிரிழந்த மாணவன் வவுனியாவைச் சேர்ந்த வைத்தியர் ஒருவரின் மகன் என்பதும் தெரியவந்துள்ளது.
வவுனியாவில் அண்மையில் இடம்பெற்ற இளம் குடும்பத்தின் மரணம், வெட்டுக்காயங்களுடன் கண்டெடுக்கப்பட்ட இளைஞன் ஒருவரின் மரணம் மற்றும் இந்த பல்கலைக்கழக மாணவனின் மரணம் என்பன வவுனியா மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.