பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று (13.03) தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி, மேல், தெற்கு, மத்திய மற்றும் கிழக்கு ஆகிய நான்கு மாகாணங்களை முதன்மையாகக் கொண்டு இந்த தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளதுடன், இன்று காலை முதல் இந்தப் பணிப்புறக்கணிப்பு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், பல தொழிற்சங்கங்களும் இந்த வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளன.