மலாவியில் புயலில் சிக்குண்டு பலர் பலி!

மலாவியில் ஃபிரடி புயல் ( Freddy Storm) தாக்கியதில் 99 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 134 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உயிரிழந்தோர் மற்றும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், மலாவில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

Social Share

Leave a Reply