சமந்தாவின் விவாகரத்து குறித்து சர்ச்சை!

பொலிவுட்டில் சர்ச்சைக்குரிய விமர்சகராக வலம்வரும் உமர் சந்து, நடிகை சமந்தாவின் விவாகரத்து குறித்து சமூகவலைத்தளத்தில் பதிவிட்ட கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதில், “சமந்தாவை பொறுத்தவரை நாகசைதன்யா மிகவும் மோசமான கணவர் எனவும், சமந்தா அவரால் உடலளவிலும், மனதளவிலும் கொடுமைகளை அனுபவித்ததாகவும் பதிவிட்டுள்ளார்.

மேலும், சமந்தா கர்ப்பமாக இருந்ததாகவும், நாக சைதன்யாவின் தொல்லையால் கருக்கலைப்பு செய்துகொண்டதாகவும் உமர் சந்து தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

அவரின் இந்த பதிவு இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளதுடன், சமந்தா – நாக சைதன்யாவின் விவாகரத்து தொடர்பில் பல்வேறு தகவல்கள் தொடர்ந்தும் வெளிவந்த வண்ணம் உள்ளன.

எது உண்மை என்பதை இதுவரை சமந்தா தரப்பும், நாக சைதன்யா தரப்பும் இதுவரையில் கருத்து வெளியிடவில்லை.

Social Share

Leave a Reply