சீன – அமெரிக்கா யுத்தம் எச்சரிக்கும் ட்ரம்ப்

சீனாவிற்கும் அமெரிக்காவிற்குமான யுத்தம் நடைபெறும் என முன்னால் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

ஆப்கானில் இருந்து அமெரிக்கா வெளியேறியதற்காக பல விமர்சனங்களை வெளிப்படுத்தி வந்த ட்ரம்ப் அமெரிக்கா தலிபான்களுக்கு அடிமையாகிவிட்டதாக கூறியிருந்தார்.

இந் நிலையில் தற்போது, சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் வர்த்தக ரீதியாகவும், கொவிட் மற்றும் சர்வதேச ரீதியிலும் பல்வேறு முரண்பாடுகள் நிலவிவருவதுடன், தற்போது தென்சீனக்கடல் நீர்மூழ்கி கப்பல் திட்டத்திற்காக அவுஸ்ரேலியாவுடன் மேற்கொண்ட ஒப்பந்ததிற்காகவும் சீனா அமெரிக்க பகைமை அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், அமெரிக்காவில் தற்போது 46வது ஜனாதிபதியாகவுள்ள ஜோ பைடன் ஊழல் செய்து வெற்றி பெற்றுள்ளதாகவும், தற்போதைய அரசாங்கம் பலவீனமாக உள்ளதன் காரணமாகவே சீனா அமெரிக்காவை மதிப்பதில்லை எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

சீன - அமெரிக்கா யுத்தம் எச்சரிக்கும் ட்ரம்ப்

Social Share

Leave a Reply