அரசியல் கட்சிகளுக்கு தேர்தல்ஆணையகம் விடுக்கும் எச்சரிக்கை!

2001ம் ஆண்டிற்கான கணக்கு அறிக்கைகளை, எதிர்வரும் 14 நாட்களுக்குள் சமர்ப்பிக்குமாறும், அவ்வாறு சமர்ப்பிக்கத் தவறிய கட்சிகளின் உரிமையை இரத்துச்செய்யவுள்ளதாகவும், தேர்தல் ஆணையத்தினால் அரசியல் கட்சிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாகப் பல தடவைகள் அறிவிக்கப்பட்டருந்த போதிலும், சில கட்சிகள் அதனைக் கருத்தில் கொள்ளவில்லையென தேர்தல்கள் ஆணையாளர் நாயகம், சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இதே வேளை உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் போட்டியிடும், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் செயளாளர்களுடனான கலந்துரையாடலொன்றை எதிர்வரும் வியாழக்கிழமை (23.03) நடாத்த தேர்தல்கள் ஆணைக்குழு தீரமானித்துள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் நேற்றைய தினம் (16.03) ஒன்று கூடி கலந்துரையாடியபோதே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply