ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி என்ற வகையில் தேர்தலுக்கு தயாராக இருப்பதுடன் எவருக்கு எதிராகவும் சேறுபூசும் தேவை தமக்கு இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் தேர்தல் தொடர்பாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நேற்று (17.03) நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இப்போது நாம் எதிர்கொண்டுள்ள இந்த சூழ்நிலையில், தேர்தல் எவ்வளவு காலத்திற்கு ஒத்திவைக்கப்படும் என்பதை தேர்தல் ஆணைக்குழுவிற்கோ, அரசாங்கத்திற்கோ, அரசியல் கட்சி என்ற வகையில் எமக்கோ உறுதியாக சொல்ல முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
சுற்றுலா தொழிற்துறை, பொருளாதாரம் என்பன வலுவடைய ஆரம்பித்துள்ள இந்த சந்தர்ப்பத்தில், சுற்றுலாப் பயணிகள் வரும் இடங்களை தேடிச் சென்று அங்கு ஆர்ப்பாட்டங்களை நடத்துவதால் மாத்திரம் தேர்தலை நடத்த முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பணம் இல்லாததே தேர்தலை நடத்த முடியாமைக்கான காரணம் என்றால், அனைவரும் இணைந்து பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டும் எனவும் நாமல் ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.