மஹிந்த மற்றும் பசிலுக்கான பயணத் தடை நீக்கம்!

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிராக விதிக்கப்பட்ட பயணத்தடையை இனி அமுல்படுத்த முடியாது என குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு உயர்நீதிமன்றம் இன்று (22.03) உத்தரவிட்டுள்ளது.

இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவரடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வுக் குழு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு அறிவிக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு ஜனாதிபதி சட்டத்தரணியால் நீதிமன்றத்திடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், பிரதிவாதிகள் இருவருக்கும் வழங்கப்பட்ட நடைமுறையில் உள்ள பயணத்தடை இனி இல்லை என்பதை குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு அறிவிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

Social Share

Leave a Reply