2023 ஆம் ஆண்டுக்கான நீர் முகாமைத்துவக் குழுக் கூட்டம் நேற்று (23.03) கண்ணொறுவை தேசிய விவசாய தகவல் தொடர்பாடல் நிலையத்தில் நீர்ப்பாசன, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ரொஷான் ரணசிங்கவின் தலைமையில் இடம்பெற்றது.
எமது நாட்டில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியை தீர்க்க சர்வதேச நாணய நிதியம் ஆதரவளித்துள்ள நிலையில், அரசாங்கம் விவசாயிகளின் உரம் மற்றும் எரிபொருள் பிரச்சினையை தீர்த்து, விவசாயிகளின் பொருளாதாரத்தை வலுப்படுத்தி, நாட்டை அரிசியில் தன்னிறைவு அடையச் செய்ய பாடுபட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வில், நீர்ப்பாசன அமைச்சின் செயலாளர் யூ.டி.சி. ஜயலால், இலங்கை மகாவலி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் கீர்த்தி பி. கொட்டகம, விவசாய அமைச்சின் அதிகாரிகள், மாவட்ட செயலாளர்கள், விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

