கதை கட்டுவதை விட்டுவிட்டு யதார்த்தத்தை புரிந்துகொள்ளுங்கள்!

இந்த பிரபஞ்ச திட்டத்தை சிலர் குறைத்து மதிப்பிடுகின்றனர் எனவும், சிலர் விமர்சிக்கின்றனர் எனவும், இதனால் பயனில்லை என்பதாக கூறுவதாகவும், சிறிய தொகை செலவழித்து மக்களை ஏமாற்றுவதாக கூறிவருவதாக தெரிவித்த எதிர்கட்சித் தலைவர், தலைநகரின் குளிரூட்டப்பட்ட அறைகளில் அமர்ந்து கொண்டு எமது பிரபஞ்சம் டிஜிடல் வகுப்பறைகளுக்கான உபகரணங்கள் வழங்கல், பிரபஞ்சம் பஸ் வழங்கல் மற்றும் மூச்சுத் திட்டங்கள் குறித்து கதை கட்டுவதை விட, இந்தப் பாடசாலைகளுக்கு நேரடியாக விஜயம் செய்து யதார்த்தங்களைப் புரிந்து கொள்ள அழைப்புவிடுக்க விரும்புவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

தேர்தல் மேடைகளில் நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் டிஜிட்டல் புரட்சிகள் பற்றி பேசினாலும்,அதை நடைமுறையில் யதார்த்தமாக்கும் எண்ணம் அவர்களுக்கு இல்லை எனவும்,அவர்களின் பிள்ளைகளுக்கு போதுமானளவு கணினிகள், I Pad கள் முதலியன இருப்பதாகவும் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இந்த டிஜிட்டல் புரட்சி நடைமுறையில் யதார்த்தமாக மாறுவது இன்றியமையாதது எனவும்  தெரிவித்தார்.

நாட்டில் 10155 அரச பாடசாலைகள் இருப்பதாகவும்,அந்தப் பாடசாலைகள் அனைத்தையும் தகவல் தொழில்நுட்ப மையங்களாக மாற்றும் ஒரு சிறிய நடவடிக்கையாக பிரபஞ்சம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்த எதிர்கட்சித் தலைவர், ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் நாட்டின் கல்விக்கும் இடையே நெருங்கிய தொடர்புள்ளதாகவும், சிறந்த கல்வி முறைமை கொண்ட ஒரு நாட்டின் பொருளாதார அபிவிருத்தியை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது எனவும் எதிர்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

அதேபோலவே வறுமை, வளமின்மை, வாய்ப்பின்மை போன்ற சமூகப் பிளவுகள் நிலவும் நமது சமூகத்திலும் கல்வியிலும் பிளவுகள் நிலவுவதாகவும், வசதி வாய்ப்புள்ளவர்கள் சர்வதேச பாடசாலைகள் மற்றும் தனியார் பாடசாலைகளுக்குச் சென்று ஆங்கிலம் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தை சரளமாக கையாள்வதாகவும்,அரச பாடசாலைகளில் பழைய பாடத்திட்டமே போதிக்கப்படுவதாகவும், இதன் காரணமாக அப்பாவி குடும்பங்களிலுள்ள பிள்ளைகள் மேலும் நிர்க்கதிக்கு உள்ளாகியுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

எனவே, இந்தக் கல்வியில் நிலவும் வேறுபாடுகளை முடிவுக்குக் கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

நாட்டின் உயிர் நாடியாக கருதப்படும் சிறுவர் தலைமுறையை அறிவு, திறமை மற்றும் வசதிகளுடன் பூரணப்படுத்துவது தார்மீக பொறுப்பு என்று நம்பி அதற்கான நிலையான நோக்கை முன்நோக்காக கொண்டு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் எண்ணக்கருவுக்கு அமைய நடைமுறைப்படுத்தப்படும் சக்வல (பிரபஞ்சம்) வேலைத்திட்டத்தின் பாடசாலை வகுப்பறைகளுக்கான டிஜிடல் திறை மற்றும் கணினி உபகரனங்களை அன்பளிப்புச் செய்யும் 24 ஆவது கட்டமாக 924,000.00 ரூபா பெறுமதியான வகுப்பறைகளுக்கான டிஜிட்டல் கணினித் திரைகள் மற்றும் கணினி உபகரணங்களும் இவ்வாறு ஹ/லுணுகம்வெஹர பெரலியல கனிஷ்ட வித்தியாலத்திற்கு இன்று(28) கையளிக்கப்பட்டது.

எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள் இதற்கு முன்னர் இருபத்தி மூன்று கட்டங்களில் பிரபஞ்சம் வேலைத்திட்டத்தின் ஊடாக 18,805,650.00 ரூபா பெறுமதியான டிஜிடல் திரைகள் மற்றும் கணினி தொழில்நுட்ப உபகரனங்களை அன்பளிப்பு செய்துள்ளார்.

மேலும் பிரபஞ்சம் வேலைத்திட்டத்துடன் இணைந்ததாக எழுபது பாடசாலைகளுக்கு 339,200,000.00 ரூபா பெறுமதியான 70 பாடசாலை பஸ் வண்டிகளும் இவ்வாறு அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளன.

Social Share

Leave a Reply