வட மாகாண ஆளுநர் பதவியினை ஏற்றார் ஜீவன் தியாகராஜா

வட மாகாண ஆளுநர் பதவிக்கான நியமன கடிதத்தினை 13 ஆம் திகதி புதன்கிழமை ஜீவன் தியாகராஜா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் பெற்றுக்கொள்ளவுள்ளார் என நம்பப்படுகிறது.

வட மாகாண ஆளுநருக்கான பதவியினை பெறுவதற்காக. தேர்தல்கள் ஆணையாளர் குழுவிலிருந்து,இராஜினாமா செய்யுமாறு ஜீவன் தியாகராஜாவிற்கு கடிதம் மூலம் ஜனாதிபதியின் செயலாளர் P.B ஜெயசுந்தர அறிவித்திருந்தார்.


இந்த நிலையில் தேர்தல்கள் ஆணையாளர் உறுப்பினர் பதவியிலிருந்து ஜீவன் தியாகராஜா இராஜினாமா செய்துள்ளார். 13 ஆம் திகதி நியமன கடிதத்தை பொறுப்பேற்றதன் பின்னர் யாழ்ப்பாணம் சென்று உத்தியோகபூர்வமாக பதவியேற்கவுள்ளார்.


ஜீவன் தியாகராஜா தன்னார்வ தொண்டு நிறுவங்களின் தலைவர் பதவியினை வகித்தமையும் குறிப்பிடத்தக்கது. நிதியமைச்சர் பசில் ராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்புகளை கொண்டவர் ஜீவன் தியாகராஜா எனவும் பேசப்படுகிறது.

வட மாகாண ஆளுநர் பதவியினை ஏற்றார் ஜீவன் தியாகராஜா

Social Share

Leave a Reply