யால தேசிய பூங்காவிற்குள் உள்நாட்டு ,மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளால் அரியவகை கருஞ்சிறுத்தை ஒன்று படம்பிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்று (29.03) காலை 8.45 மணியளவில் இந்த கரும் சிறுத்தையினை சுற்றுலாப்பயணிகள் கண்டுள்ளனர்.
சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச்செல்கையில் சுமார் 8.45 மணியளவில் இந்த அரியவகை கருஞ்சிறுத்தை, பாதையின் ஒரு பக்கத்தில் உள்ள பாறையொன்றின் மேல் அமர்ந்திருந்ததாகவும்,பின்னர் அது தனது தாயுடன் பாதையின் மறு புறத்திற்கு கடந்து சென்றதாகவும் அங்கே சுமார் 30 வருடங்களாகப் பணிபுரிந்து வரும் கே.ஜி என்றழைக்கப்படும் சவாரி வண்டிச் சாரதி கூறியுள்ளார்.
யாலவில் சுமார் 30 வருடங்களாக சவாரி சுற்றுப்பயணங்களை மேற்கொண்டு வருவதாகவும், இதுவே முதன்முறையாக கறுப்புச் சிறுத்தையைக் கண்டதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்
