எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலை அதிகரிப்பை தவிர்க்க முடியாது என அகில இலங்கை கோழி வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.
தேவைக்கு ஏற்ப விநியோகத்தை வழங்குவதில் உள்ள சிரமம் காரணமாக கோழி இறைச்சியின் விலை கிலோ ஒன்றுக்கு 1200 ரூபாவில் இருந்து 1400 ரூபாவாக அதிகரிக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அஜித் குணசேகர இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார்.
பண்டிகை காலத்தில் தேவை அதிகரிக்கும் நிலையில், போதிய அளவு விநியோகிக்க முடியுமா என்ற கேள்வியும் தங்களுக்கு உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.