வவுனியா, குட்செட் வீதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் மர்மமான முறையில் மார்ச் மாதம் 07 ஆம் திகதி மரணமடைந்த நிலையில் சடலங்களாக மீட்பட்டனர்.
இந்த விடயம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் வவுனியா பொலிஸ் மாவட்ட முதனமை அதிகாரிக்கு கடிதம் எழுத்தியுள்ளார்.
“இந்த சம்பவம் தொடர்பில் எந்த தகவலும் வெளியாகவில்லை”. மரணத்திற்கான காரணம் இன்னமும் கண்டறியப்படவில்லை. இந்த விடயத்தில் தங்கள் கவனத்தை ஈர்த்து நீதி நியாயமான தீர்வை பெற்று தருமாறு கேட்டுக் கொள்கிறேன்” என அவரது கடிதத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நடைபெற்ற சம்பவம் தொடர்பிலும், உடற்கூற்று பரிசோதனையில் மரணத்துக்கான காரணம் தொடர்பில் 100 சதவீதம் உறுதியான காரணத்தை கண்டு பிடிக்க முடியாத நிலையிலும் உடற்பாக மாதிரிகள், இரத்தம், சிறுநீர் உட்பட பல மாதிரிகள் அரசாங்க பகுப்பாய்வு திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
“உடற்கூற்று பரிசோதனை ஒன்றின் முடிவினை பெற ஆக குறைந்தது 6 வாரங்கள் எடுக்குமெனவும், காலம் வரையறுக்க முயடியாதளவு நாட்கள் அதிகமாக எடுக்கலாம்” என வவுனியா சட்ட வைத்திய அதிகாரி
வி மீடியாவுக்கு தெரிவித்துள்ளார்.
100 சதவீத உறுதியான முடிவுகள் பரிசோதனைகளின் அடிப்படையில் கிடைக்காமல் மரணத்துக்கான காரணத்தை வெளியிட முடியாது எனவும், பரிசோதனை முடிவுகள் கிடைக்கப்பெற்றதன் பின்னரே இறப்புக்கான காரணத்தினை வெளியிட முடியுமெனவும் மேலும் கூறியுள்ளார்.
அரச பகுப்பாய்வு திணைக்களம் தமது பரிசோதனை முறைமையின் அடிப்படையிலே செயற்படுவதாகவும், அவர்களது நடைமுறைகளை வேகப்படுத்துமாறு அழுத்தம் கொடுப்பது பரிசோதனைகளில் தாக்கத்தை ஏற்படுத்திவிடலாம் என்ற காரணத்தினாலும், அவர்களது நடைமுறைகளின் படி முடிவுகளை பெறுவதே சிறந்தது என்றும் அதுவரை காத்திருக்க வேண்டும் எனவும் சட்ட வைத்திய அதிகாரி கூறியுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் ஏற்பட்டுள்ள சதேகங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு அறியப்படுத்தி அவற்றுக்குரிய விசாரணைகளை முன்னெடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளதாகவும் மேலும் எமக்கு கூறியுள்ளார்.
சில 100 சதவீத உறுதிப்படுத்தல்கள் இன்றி வெளியிடப்பட்ட உடற்கூற்று பரிசோதனை முடிவுகளினால் வழக்கிலும், மக்கள் மத்தியிலும் ஏற்பட்ட குழப்பங்களை சுட்டிக் காட்டிய அவர், 100 சதவீத விஞ்ஞான முறைமையிலான உறுதிப்படுத்தல்கள் மூலமாகவே தான் இறுதி முடிவை வெளியிடுவேன் என்பதனை உறுதிபடக் கூறினார்.
தாங்கள் இந்த விசாரணைகளை முன்னெடுப்பதற்கு, புறக்காரணிகள் மற்றும் தகவல் தெரிவந்தவர்கள் தமக்கு தெரிந்தவற்றை தன்னோடு பகிர்ந்து கொள்வது விசாரணைகளுக்கு உதவுமெனவும், தெரிந்தவர்கள் தன்னுடன் இரகசியமான முறையில் தகவல்களை பகிர்ந்து கொள்ள முடியுமெனவும் வேண்டுகோள் விடுத்தார்.
சமூக வலைத்தளங்கள் மற்றும் ஊடகங்கள் மூலம் வெளியாகிய பல தகவல்கள் மற்றும் இந்த சம்பவம் தொடர்பில் சாதரண மக்கள் மத்தியில் பேசப்படும் பல விடயங்கள் வதந்திகளாகவே காணப்படுகின்றன. மக்கள் வதந்திகளை பரப்புவது, பொய்யான தகவல்களை பகிர்வது விசாரணைகளில் தாக்கம் செலுத்துமென்பதை வி மீடியா பொறுப்பான ஊடகமாக அனைவருக்கும் தெரிவித்துக்கொள்கிறது.
இந்த சம்பவம் நடைபெற்ற முதல் தினத்தில் இருந்து பல தகவல்கள், எமது ஊடகத்துக்கு தெரிந்த போதும், அவற்றை நாம் இன்றுவரை வெளியிடவில்லை. இறுதியாக கிடைத்துள்ள காணொளி காட்சிகளை கூட நாம் வெளியிடவில்லை. தகவல்களை வெளியிடாமல் காத்து விசாரணைகளுக்கு உதவுவதும் கூட ஊடக தர்மமே.
இறந்த குடுத்பத்தினர் சார்பாக இரு பக்க சார்பாகவும் இந்த மரணங்களில் சந்தேகம் இருப்பதாக உறுதியாக நம்புகின்றனர். தற்கொலை செய்துகொண்டிருப்பதற்கான வாய்ப்புகள் இல்லை எனவும் உறுதியாக நம்புகின்றனர். எனவே வதந்திகள் மற்றும் போலியான தகவல்களை பரப்ப வேண்டாமெனவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்த விடயம் தொடர்பில் முன்னணி ஊடகமொன்று கூட “குடும்பத்தை கொலை செய்த கணவன், தானும் தற்கொலை” என்ற தலையங்கத்தையோடு கடந்த வாரம் செய்தி வெளியிட்டு பின்னர் குடும்பத்தினது ஆட்சேபனையின் பின்னர் அதனை நீக்கியிருந்தது.
இந்த விடயம் தொடர்பில் தாம் தொடர்ச்சியான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகும், பலரிடம் வாக்கு மூலங்களை பெற்றுள்ளதாகவும், உடற்பகுப்பாய்வு விசாரணைகள் முடிவு விசாரணைகளில் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையுமெனவும், அதன் முடிவுகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதற்கு உதவுமெனம் விசாரணைகளை மேக்கொள்ளும் பொலிஸ் அதிகாரி குடும்பத்தினருக்கு தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தில் இறந்த கெசீகன் சிறந்த கிரிக்கெட் வீரர் எனவும், பலருக்கு சிறந்த அறிவுரைகளை கூறி, பலரை உற்சாகப்படுத்துபவர் எனவும், குறிப்பாக தோல்விகளின் போது கிரிக்கெட் வீரர்களை தட்டிக்கொடுத்து உற்சாகப்படுத்துபவர் எனவும் விளையாட்டு சார்பான நண்பர்கள் கூறுகின்றனர். விளையாட்டில் மட்டுமல்ல தனிப்பட்ட பிரச்சினைகள் நண்பர்கள் வட்டாரத்தில் ஏற்பட்ட வேலைகளில் அறிவுரை கூறி தட்டிக்கொடுக்கும் ஒரு நல்லவர் தவறான ஒரு முடிவினை எடுக்க மாட்டார் என நம்பிக்கை வெளியிட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் சந்தேகம் இருப்பதாகவே அவர்கள் கூறுகின்றனர்.
இறந்தவேரோடு இறுதியாக அவரோடு தொலைபேசியில் நண்பர் பொலிஸாருக்கு வாக்கு மூலம் வழங்கியுள்ளார். அவர் கூட அவரது பேச்சுத்தொனி சாதாரணமாகவே காணப்பட்டதாகவும், சாதரண ஒரு நட்பு ரீதியாக பேசியுள்ளதாகவும் கூறியுள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று இரவு 9 மணியளவில் அவர் தொலைபேசியில் பேசியுள்ளார்.
குடும்ப தகராறுகள் எதுவும் இருக்கவில்லை என்பதனை இரு தரப்பு குடும்பத்தினரும் உறுதிப்படுத்தும் அதேவேளை, மார்ச் 05 ஆம் திகதி அவர் வெளியே செல்லும் போது கணவன் மனைவி ஆகியோரது சாதாரணமான உரையாடல் மற்றும் நடத்தைகள் கண்காணிப்பு கமராவில் பதிவாகியுள்ளன. அத்தோடு பிள்ளைகளும் அவரோடு செல்லம் கொஞ்சி விளையாடுவதும் கூட பதிவாகியுள்ளது. குடும்பத்தோடும் மிகவும் நெருக்கமானவர் என நண்பர்கள், அயலவர்கள் உறவினர்கள் அனைவரும் கூறுகின்றனர்.
இப்படியான மர்மான பல விடயங்கள் நிறைந்த இந்த சம்பவத்தின் இரசாயன பகுப்பாய்வு முடிவுகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக அமையவுள்ளது. அத்தோடு பொலிஸ் விசாரணைகளும் முக்கியமானதே. இந்த முடிவுகள் வரும் வரை அனைவரும் அமைதி காப்பதே இந்த வழக்கின் விசாரணைக்கு உதவியாக இருக்கும் என்பதனை வி மீடியா அனைவருக்கும் தெரிவித்துக்கொள்கிறது.
