லக்னோ அணிக்கு இரண்டாவது வெற்றி

லக்னோ சுப்பர் ஜியன்ட்ஸ் அணி சன்ரைசேர்ஸ் ஹைட்ரபாத் அணியினை இலகுவாக வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை தனதாக்கியுள்ளது. மூன்று போட்டிகளில் 04 புள்ளிகளை லக்னோ சுப்பர் ஜியன்ட்ஸ் அணி பெற்றுள்ளது.

இன்றைய(07.04) போட்டியில் முதலில் துடுப்பாடிய சன்ரைசேர்ஸ் ஹைட்ரபாத் அணி 20 ஓவர்களில் 08 விக்கெட்களை இழந்து 121 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. இதில் ஆர்மோல் சிங் 31 ஓட்டங்களையும், ராகுல் திருப்பதி 34 ஓட்டங்களையும் பெற்றனர். ஆரம்பம் முதலே விக்கெட்கள் வீழ்த்தப்பட்ட இவர்கள் இருவரும் ஓரளவு ஓட்டங்களை பெற்ற போதும் இவர்களது ஆட்டமிழப்பை தொடர்ந்து அடுத்தடுத்து விக்கெட்கள் வீழ்த்தப்பட தடுமாறி போனது சன்ரைசேர்ஸ் ஹைட்ரபாத் அணி.

பந்துவீச்சில் குர்னால் பாண்ட்யா 3 விக்கெட்களையும், அமித் மிஸ்ரா 2 விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.

பதிலுக்கு துடுப்பாடிய லக்னோ சுப்பர் ஜியன்ட்ஸ் அணி 16 ஓவர்களில் வெற்றியிலக்கை அடைந்தது. லோகேஷ் ராகுல் 35 ஓட்டங்களையும், குர்னால் பாண்ட்யா 34 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ஆதில் ரஷீட் 2 விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.

நாளைய தினம் குஜராத், கொல்கொத்தா அணிகளுக்கிடையிலான போட்டி முதற் போட்டியாகவும், அனைவரும் எதிர்பார்க்கும் சென்னை, மும்பை போட்டி இரண்டாவது போட்டியாகவும் நடைபெறவுள்ளது.

லக்னோ அணிக்கு இரண்டாவது வெற்றி

Social Share

Leave a Reply