இலங்கை வானிலையில் திடீர் மாற்றம் விமான சேவைகளில் தாமதம்!

கட்டுநாயக்க பகுதியில் நேற்று (07.04) இரவும் இன்றும் (08.04) பெய்த கடும் மழை காரணமாக பல விமானங்களின் வருகை மற்றும் புறப்படும் நேரங்களில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, இன்று (08) அதிகாலை 04.45 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையவிருந்த ஸ்ரீலங்கன் எயார்லைன் விமானமான UL-226 சுமார் 12 மணித்தியாலங்கள் தாமதமாக இன்று (08.04)  மாலை 04.55 மணிக்கு நாட்டை வந்தடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளன.

மேலும், ஜப்பானின் நரிட்டா நோக்கிப் புறப்படவிருந்த விமானம், மற்றும் மும்பைக்கு பயணிக்கவிருந்த விமானம் ரத்து செய்யப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இன்று அதிகாலை மும்பையிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வரவிருந்த ஸ்ரீலங்கன் எயார்லைன் விமானமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

சீனாவின் ஷங்காய் நகரில் இருந்து வந்து நேற்றிரவு 7:00 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கவிருந்த சைனா ஈஸ்டர்ன் எயார்லைன்ஸ் விமானம் மாலைதீவிற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Social Share

Leave a Reply