IPL கிரிக்கெட் தொடரின் முதல் சுற்று போட்டிகள் நேற்று (08.10.2021) நிறைவடைந்துள்ளன. டெல்லி கப்பிட்டல்ஸ் அணி 10 வெற்றிகளை பெற்று 20 புள்ளிகளோடு முதலிடத்தை பெற்றது. சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 18 புள்ளிகளை பெற்று இரண்டாமிடத்தை பெற்றது.
இந்த இரண்டு அணிகளும் 10 ஆம் திகதி முதலாவது தெரிவுகான் போட்டியில் விளையாடவுள்ளன .
ரோயல் சலஞ்சேர்ஸ் பெங்களுர் அணி 18 புள்ளிகளோடு மூன்றாமிடத்தை பெற்றது. கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணி 14 புள்ளிகளோடு நான்காமிடத்தை பெற்றுக்கொண்டது. இந்த இரு அணிகளும் 11 ஆம் திகதி வெளியேற்றும் போட்டியில் விளையாடவுள்ளது.
நடப்பு சம்பியன்ஸ் மும்பை அணி ஐந்தாமிடத்தை பெற்று அடுத்த சுற்று வாய்ப்பை இழந்துள்ளது. தொடர்ந்து வரும் இடங்களை பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ரோயல்ஸ், சன்ரைஸ் ஹைட்ராபட் ஆகிய அணிகள் பெற்றுக் கொண்டன.
புள்ளிப்பட்டியல்
இன்று நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ், சன்ரைஸ் ஹைட்ராபட் அணிகளுக்கிடையிலான போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 235 ஓட்டங்களை பெற்றது. இதில் இசன் கிஷன் 84(32), சூரியகுமார் யாதவ் 82(40) ஓட்டங்களை பெற்றனர்.
பந்துவீச்சில் ஜேசன் ஹோல்டர் 4 விக்கெட்களையும், ரஷீட் கான் 2, அபிஷேக் ஷர்மா 2 விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.
பதிலுக்கு துடுப்பாடிய சன்ரைஸ் ஹைட்ராபட் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 193 ஓட்டங்களை பெற்றனர். மானிஷ் பான்டே ஆட்டமிழக்காமல் 69(41), ஜேசன் ஹோல்டர் 34 (21) ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் ஜஸ்பிரிட் பும்ரா 2 , நேதன் கூட்லர் நைல் 2, ஜேம்ஸ் நீஸாம் 2 விக்கெட்களையும் கைபப்ற்றினார்கள். மும்பை இந்தியன்ஸ் அணி 42 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது.
டெல்லி கப்பிட்டல்ஸ், ரோயல் சலஞ்சேர்ஸ் பெங்களுர் அணிகளுக்கிடையில் நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பாடிய டெல்லி கப்பிட்டல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 164 ஓட்டங்களை பெற்றது. இதில் பிரித்வி ஷோ 48(31) ஓட்டங்களையும். ஷிகர் தவான் 43(35) ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் மொஹமட் சிராஜ் 2 விக்கெட்களை கைப்பற்றினார். பதிலுக்கு துடுப்பாடிய ரோயல் சலஞ்சேர்ஸ் பெங்களுர் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 166 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது. இதில் சிரிகர் பரத் ஆட்டமிழக்காமல் 78(52) ஓட்டங்களையும், கிலன் மக்ஸ்வெல் ஆட்டமிழக்காமல் 51(33) ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் அன்றிச் நோக்கியா 2 விக்கெட்களை கைப்பற்றினார்.