உள்ளூராட்சி தேர்தல் 2023 தொடர்பில் பிரதமர் டினேஷ் குணவரத்ன மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு இடையிலான சந்திப்பு ஒன்று நாளை(10.04) காலை நடைபெறவுள்ளதாக பிரதமர் ஊடக பிரிவு அறிவித்துள்ளது.
பல தடவைகள் உள்ளூராட்சி மன்ற தேர்தல் பிற்போடப்பட்டுள்ள நிலையில், இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாட தேர்தல்கள் ஆணைக்குழு பிரதமரிடம் கோரிக்கை விடுத்திருந்ததாக தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் நிமல் புஞ்சிஹேவா ஏற்கனவே கூறியிருந்தார்.
இவ்வாறன நிலையிலேயே இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
