மேல், சப்ரகமுவ, மத்திய, தெற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களில் ஒரு சில இடங்களில் இன்று (11.04) மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் ஓரளவு மழை பெய்யக் கூடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் மக்கள் பாதிகப்பகை இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும் இன்று மதியம் 12:11 மணிக்கு, சூரியன் கல்பிட்டி, துனுபோதகம, நிக்கேவ, சோமாவதி புத்பிம மற்றும் வெருகல் ஆகிய பகுதிகளில் உச்சம் கொடுக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.