சீனா, இந்தியா மற்றும் ஏனைய நாடுகளுடன் கடன் மறுசீரமைப்பு தொடர்பான உடன்படிக்கைகளை மே மாததிற்குள் மேற்கொள்ள எதிர்பார்க்கப்படுவதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
கடன் மறுசீரமைப்பு செயல்முறைக்கு உத்தியோகபூர்வ குழுவொன்றை நியமிப்பதா அல்லது இருதரப்பு பேச்சுவார்த்தைகள் மூலம் இறுதி உடன்பாட்டை எட்டுவதா என்பது குறித்து சம்பந்தப்பட்ட தரப்பினர் தீர்மானிப்பார்கள் என மத்திய வங்கியின் ஆளுநர் சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
சர்வதேச கடன் வழங்குனர்களுடன் கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கையை எட்டுவதற்கு முன்னர் உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு செயல்முறை தொடர்பான இறுதி தீர்மானங்களை மேற்கொள்ள எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.