கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை!

சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீசாலை பகுதியில் நேற்று (11.04) மாலை ஒருவர் கத்தி மற்றும் அலவாங்கால் தாக்கி கொடூரமான முறையில் கொல்லப்பட்டுள்ள சம்பவம் பதிவாகியுள்ளது.

ஆனக்கோட்டை பிரதேசத்தில் வசிக்கும் 43 வயதுடைய தனியார் வைத்தியசாலை தாதி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கொலையைச் செய்த சந்தேகநபர் மனநலம் பாதிக்கப்பட்டு காரணமாக தெல்லிப்பளை மனநல வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருபவர் எனவும், உயிரிழந்தவர் இவருக்கு தாதியாக பணிபுரிந்தவர் எனவும் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சாவகச்சேரி பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Social Share

Leave a Reply