சட்டவிரோத மதுபான உற்பத்திகள் தொடர்பில் விசேட சுற்றிவளைப்பு!

தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள மதுபான சாலைகள் நாளை (13.04) மற்றும் நாளை மறுதினம் (14.04) மூடப்படும் என மதுவரி திணைக்களம் அறிவித்துள்ளது.

மேலும் எதிர்வரும் 31ஆம் திகதி வரை நாடு முழுவதிலும் சட்டவிரோத மதுபானங்களை சுற்றிவளைக்கும் விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மதுவரி திணைக்களத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பான தகவல்களை 1913 என்ற விசேட தொலைபேசி இலக்கத்தினூடாக மக்கள் வழங்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply