பண்டிகை காலத்தில் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள்!

பண்டிகைக் காலங்களில் பாதுகாப்பு நோக்கங்களுக்காக பொலிஸ் மற்றும் புலனாய்வு அதிகாரிகள் அடங்கிய குழுக்களை ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும், பண்டிகைக் காலங்களில் மோசடியான செயற்பாடுகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

“மனிதர் சாப்பிடுவதற்குத் தகுதியற்ற உணவுப் பொருட்களை விற்கும் போலி விற்பனையாளர்கள், அதிக விலைக்கு பொருட்களை விற்பவர்கள், போலி ரூபாய் தாள்களை கொண்டு கொடுக்கல் வாங்கல் செய்பவர்களிடம் அவதானமாக இருக்குமாறும் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தங்க நகைகளை அணிவதை தவிர்க்குமாறும், பணப்பைகள் மற்றும் கைப்பைகளின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை கைது செய்யவும், சட்டதிட்டங்களை மீறி நடப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், பொலிஸாரும் புலனாய்வுப் பிரிவினரும் பண்டிகைக் காலத்திற்காக பல பகுதிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் சில அதிகாரிகள் சிவில் உடையில் இருக்க அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply