கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தின் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் கற்களை வீசி எறிந்து தாக்குதல் நடத்திய சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
ஹலவத்தை – கொழும்பு பிரதான வீதியில் மாரவில – ஹொரகொல்ல பிரதேசத்தில் நேற்று (12.04) இரவு இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக மாரவில பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மோட்டார் சைக்கிளில் வந்த இருவரை அடையாளம் காண பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.