இலங்கை,அயர்லாந்து முதல் டெஸ்ட் ஆரம்பம்

இலங்கை மற்றும், அயர்லாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி காலி சர்வதேசக் கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பித்துள்ளது.

அயர்லாந்து கிரிக்கெட் அணி டெஸ்ட் அந்தஸ்து பெற்றதன் பின்னர் இலங்கைக்கு டெஸ்ட் போட்டிக்காக வருகை தந்துள்ளமை இதுவே முதற் தடவையாகும். அயர்லாந்து அணி இன்று விளையாடுவது இலங்கையில் முதற் போட்டியாகும். ஏனைய அணிகளுடன் இதுவரை விளையாடிய நான்கு போட்டிகளிலும் அயர்லாந்து தோல்வியை சந்தித்துள்ளது.

இலங்கை அணி நியுசிலாந்து அணியுடனான இரண்டு போட்டிகளிலும் தோல்வியை சந்தித்த பின்னர் விளையாடும் தொடர் இதுவாகும்.

காலி மைதானப்பகுதி கடும் வெயிலுடன் கூடிய வாநிலையை கொண்டுள்ளது. காலியின் சில பகுதிகளில் கரு முகில் கூட்டங்களும் காணப்படுகின்றன.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்துள்ளது.

இந்த போட்டியினை பார்வையாளர்கள் இலவசமாக பார்வையிடஇலங்கை கிரிக்கெட் வாய்ப்பு வழங்கியுள்ளது.

அணி விபரம்

அயர்லாந்து

மரே கம்மின்ஸ், ஜேம்ஸ் மக்கலம், அன்டி பல்பேர்னி, ஹரி டெக்டர், பீட்டர் மூர், கேர்ட்டிஸ் கம்பர், லோர்கன் ரக்கர், மார்க் அடேர், அன்டி மக்பிரைன், ஜோர்ஜ் டொக்ரெல், பென் வைட்

இலங்கை

டிமுத் கருணாரட்ன, நிஷான் மதுஷ்க, குஷல் மென்டிஸ், அஞ்சலோ மத்தியூஸ், டினேஷ் சந்திமால், தனஞ்சய டி சில்வா, சதீர சமரவிக்ரம, ரமேஷ் மென்டிஸ், பிரபாத் ஜெயசூரிய, விஸ்வ பெர்னாண்டோ, அசித்த பெர்னாண்டோ

இலங்கை,அயர்லாந்து முதல் டெஸ்ட் ஆரம்பம்

Social Share