அதிவேக நெடுஞ்சாலையின் வருவாய் விபரம்!

இன்று (17.04) காலை 06 மணியுடன் நிறைவடைந்த 48 மணித்தியாலங்களில் நெடுஞ்சாலைகளின் வருமானம் 7 கோடி ரூபாவை எட்டியுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் எல். வி. எஸ். வீரகோன் தெரிவித்துள்ளார்.

குறித்த காலப்பகுதியில் நெடுஞ்சாலைகளில் பயணித்த வாகனங்களின் எண்ணிக்கை 256000 ஐ தாண்டியுள்ளதாகவும், அதிக எண்ணிக்கையிலான வாகனங்கள் பயணித்தாலும் பாரிய விபத்துக்கள் எதுவும் பதிவாகவில்லை என்பது மிக சிறப்பான விடயம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply